இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பு (Society of Indian Automobile Manufacturers) செப்டம்பர் மாத வாகன விற்பனை குறித்த புள்ளி விவரத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாத விற்பனையை ஒப்பிடும்போது நடப்பாண்டில் விற்பனை அளவானது 26.45 விழுக்காடு உயர்வைக் கண்டுள்ளது. 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இரண்டு லட்சத்து 15 ஆயிரத்து 124 வாகனங்கள் விற்பனையான நிலையில், நடப்பாண்டில் இரண்டு லட்சத்து 72 ஆயிரத்து 27 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இரு சக்கர வாகனங்கள் விற்பனை 11.64 விழுக்காடு உயர்வைச் சந்துள்ளன. 2019ஆம் ஆண்டு செப்டம்பரில் 16 லட்சத்து 56 ஆயிரத்து 658 வாகனங்கள் விற்பனையான நிலையில், நடப்பாண்டில் தற்போது 18 லட்சத்து 49 ஆயிரத்து 546 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. அதேபோல் மோட்டர் வாகன விற்பனையும் 17.3 விழுக்காடு உயர்வைச் சந்தித்துள்ளது.
இருப்பினும், நடப்புக் காலாண்டில் வணிக வாகனங்களின் விற்பனையானது சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு இரண்டாம் காலாண்டில் 56 லட்சத்து 51 ஆயிரத்து 459 வாகனங்கள் விற்பனையான நிலையில், நடப்புக் காலாண்டில் அது 55 லட்சத்து 96 ஆயிரத்து 223ஆக சரிந்துள்ளது.
இதையும் படிங்க: 9,900க்கு ஆப்பிளின் ஹோம்பாட் மினி!