டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குநரான எஸ்பிஐ வங்கி, சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பத்திரங்கள் விற்றதன் மூலம் 600 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 4,500 கோடி ரூபாய்) திரட்டியுள்ளது.
இந்த பத்திரங்கள் லண்டனில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளை மூலமாக, வரும் 13ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய வங்கி அலுவலர் ஒருவர், "உலகின் முன்னணி முதலீட்டாளர்கள் மூலம் இந்த தொகை திரட்டப்பட்டுள்ளது. இது இந்திய வங்கியின் மீது சர்வதேச முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை காட்டுகிறது" என்றார்.
இதையும் படிங்க: புதிய லோகோவை கின்னஸ் சாதனையுடன் வெளியிட்ட கியா!