மும்பை: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா லக்சம்பர்க் பங்குச் சந்தையுடன் (லக்ஸ்ஸே) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இதன்மூலம் சுற்றுச்சூழல், சமூகம், நிலையான நிதி சேவை ஆகியவற்றை மேம்படுத்தவும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், நிலையான நிதி திரட்டலுக்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும் என்று ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
இதுவரையில் ஸ்டேட் வங்கி நிலையான நிதி பத்திரங்களின் மூலம் 800 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 5933 கோடி ரூபாய்) திரட்டியுள்ளது.
இந்தியாவில் அதிகபடியான வாடிக்கையாளர்களை கொண்ட பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, உலகளவில் தனது கிளைகளை விரிவுப்படுத்தியுள்ளது.
இந்த வங்கியானது 22 ஆயிரத்து 300 கிளைகள், 58 ஆயித்து 800 பணப் பரிவர்த்தனை மையங்களை கொண்டுள்ளது செயல்பட்டுவருகிறது.