ETV Bharat / business

ரிலையன்ஸ் நிறுவனத்தின் லாபம் சரிவு! - முகேஷ் அம்பானி

டெல்லி: சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் தேவை குறைந்துள்ளதால் 2020-21ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 15 விழுக்காடு குறைந்துள்ளது.

Reliance Industries
Reliance Industries
author img

By

Published : Oct 31, 2020, 3:00 PM IST

கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தின. இந்த ஊரடங்கு காரணமாக பல்வேறு நிறுவனங்களும் பொருளாதார ரீதியில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன.

லாபம் எப்படி?

இந்நிலையில், 2020-21ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 15 விழுக்காடு குறைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் ரூ.11,262 கோடியை ரிலையன்ஸ் நிறுவனம் லாபமாக ஈட்டிருயிருந்த நிலையில், இந்தாண்டு ரூ.9,567 கோடியாக அந்நிறுவனத்தின் லாபம் குறைந்துள்ளது.

காரணம் என்ன?

கரோனா காரணமாக பெரும்பாலான மக்கள் வீட்டில் இருந்தே பணிபுரிந்துவருவதால், பெட்ரோல்-டீசல் பயன்பாடு குறைந்து, தேவையும் குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு பிரதான தொழிலாக செய்துவரும் ரிலையன்ஸின் லாபம் இதனால் பெருமளவு குறைந்ததுள்ளது.

ஒரு பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பதன் மூலம் கடந்தாண்டு 9.4 டாலர்களை லாபமாக ஈட்டிய ரிலையன்ஸ் நிறுவனத்தால், இந்தாண்டு வெறும் 5.7 டாலர்களை மட்டுமே லாபமாக ஈட்ட முடிகிறது.

சில்லறை வர்த்தகம்

தளர்வு அறிவிப்புகள் காரணமாக மால்கள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுவருவதால், சில்லறை வர்த்தக வருமானமும் கணிசமாக அதிகரித்துள்ளது. இரண்டாம் காலாண்டில் சுமார் 85 விழுக்காடு கடைகள் திறக்கப்பட்டதாக ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தக் காலகட்டத்தில் புதிதாக 232 கடைகளை ரிலையன்ஸ் நிறுவனம் திறந்துள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு உள்ள கடைகளின் எண்ணிக்கை 11,931ஆக உயர்ந்துள்ளது.

ஜியோ

மறுபுறம், ஜியோ நிறுவனத்தின் நிகர லாபம் மூன்று மடங்கு உயர்ந்து ரூ.2,844 கோடியாக உள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் அந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.990 கோடியாக இருந்தது.

இதையும் படிங்க: 75 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம்போன ஒரு கிலோ தேயிலைத் தூள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.