ரிசர்வ் வங்கியின் கடன் விதிகளை முறையாகப் பின்பற்றாத 14 வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த 14 வங்கிகளும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு கடன் வழங்கியதில் முறையான வழிமுறைகளைப் பின்பற்றவில்லை என ரிசர்வ் வங்கி புகார் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், மொத்த அபராதத் தொகை 14 கோடியே 50 லட்சம் ரூபாய் ஆகும். அதில் அதிகபட்ச அபராதத் தொகை இரண்டு கோடி ரூபாய் பேங்க் ஆஃப் பரோடா வங்கிக்கும், குறைந்தபட்ச அபராதத் தொகை 50 லட்சம் ரூபாய் பாரத ஸ்டேட் வங்கிக்கும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராதம் வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949இன்கீழ் விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதை உரிய நேரத்தில் செலுத்த மேற்கண்ட வங்கிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் ரிச்ர்வ் வங்கி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டோக்கியோவில் அவசரநிலை ஊரடங்கு: பார்வையாளரின்றி ஒலிம்பிக் 2020?