ETV Bharat / business

தொடர்ந்து 4ஆவது முறையாக வட்டி விகிதங்களில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி

author img

By

Published : Feb 5, 2021, 2:19 PM IST

டெல்லி: வட்டி விகிதம் 4 விழுக்காட்டில் தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சக்திகாந்த தாஸ்
சக்திகாந்த தாஸ்

கரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் வட்டி விகிதத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மத்திய வங்கியின் நிதிக் கொள்கைக் குழு எடுத்த முடிவுகளின்படி, ரெப்போ வட்டி விகிதம் 4 விழுக்காட்டிலேயே தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் எந்த மாற்றமும் இன்றி 3.35 விழுக்காட்டில் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதை தொடரும் வகையில் வட்டி விகிதங்களில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை என சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம், ரெப்போ வட்டி விகிதம் 115 புள்ளிகள் குறைக்கப்பட்டன. கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி தொடங்கிய நிதிக் கொள்கைக் குழுவின் 27ஆவது கூட்டத்தில் அஷிமா கோயல், ஜெயந்த் ஆர் வர்மா, சஷங்கா பைடே ஆகியோர் கலந்துகொண்டனர். நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்ததைத் தொடர்ந்து கூட்டப்பட்ட முதல் கூட்டம் இதுவாகும்.

தொடர்ந்து நான்காவது முறையாக வட்டி விகிதங்களில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.