ஆட்டோ மொபைல் விற்பனையாளர் கூட்டமைப்பு (FADA) டிசம்பர் மாத வாகன விற்பனை குறித்த புள்ளி விவரத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாத விற்பனையை ஒப்பிடும்போது நடப்பாண்டில் விற்பனை அளவானது 23.99 விழுக்காடு உயர்வைக் கண்டுள்ளது.
2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டு லட்சத்து 18 ஆயிரத்து 775 வாகனங்கள் விற்பனையான நிலையில், அது நடப்பாண்டில் இரண்டு லட்சத்து 71 ஆயிரத்து 249ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இரு சக்கர வாகனங்கள் விற்பனை 11.88 விழுக்காடு உயர்வைச் சந்தித்துள்ளன. 2019ஆம் ஆண்டு டிசம்பரில் 12 லட்சத்து 73 ஆயிரத்து 318 வாகனங்கள் விற்பனையான நிலையில், நடப்பாண்டில் தற்போது 14 லட்சத்து 24 ஆயிரத்து 620 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. அதேபோல் டிராக்டர் விற்பனையும் 35.49 விழுக்காடு உயர்வைச் சந்தித்துள்ளது.
இருப்பினும், வணிக வாகனங்களின் விற்பனையானது சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பப் மாதத்தில் 59 ஆயிரத்து 497 வாகனங்கள் விற்பனையான நிலையில், டிசம்பரில் அது 51 ஆயிரத்து 4ஆக சரிந்துள்ளது.
இதையும் படிங்க: சிமென்ட் தொழிற்சாலைகள் சுயலாபத்திற்காக சந்தையை துஷ்பிரயோகம் செய்கின்றன - நிதின் கட்கரி