ETV Bharat / business

கரோனாவால் இந்தத் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்! - பசுமை போக்குவரத்து

ஹைதராபாத்: வரும் காலங்களில் மின்சார வாகனங்களில் முதலீடுகள் அதிகரிக்கும்போது சுமார் 1.5 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

Post COVID-19 recovery greening transport secto

author img

By

Published : May 21, 2020, 3:14 PM IST

கோவிட்-19 பரவல் சர்வதேச அளவில் கடும் பாதிப்புகளை உருவாக்கியுள்ளது. அதிலும் குறிப்பாக வளர்ந்த நாடுகள் கரோனா தொற்றால் பல இன்னல்களைச் சந்தித்துள்ளன. இதனால் கச்சா எண்ணெய் விலையும் வரலாறு காணாத வகையில் சரிவைச் சந்தித்தது.

இந்தச் சூழ்நிலையில் சர்வதேச தொழிலாளர் அமைப்பும் ஐரோப்பாவிற்கான ஐ.நா. பொருளாதார ஆணையமும் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குறைந்த கார்பனை வெளியிடும் பசுமைப் போக்குவரத்தை ஊக்குவிக்கும்வகையில் வாகனங்களைத் தயாரிப்பதில் முதலீடுகள் அதிகரிக்கும்பட்சத்தில் அது லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

இது நாடுகளைப் பசுமையானதாகவும் பொருளாதார ரீதியாக வலுவானதாகவும் மாற்றும். இதன்பின் தயாரிக்கப்படும் வாகனங்களில் 50 விழுக்காடு வாகனங்கள் மின்சார வாகனங்களாகத் தயாரிக்கப்படும்பட்சத்தில் அது ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

இதுதவிர ஐரோப்பிய நாடுகள் பொதுப்போக்குவரத்துகளில் முதலீடுகளை அதிகரிக்கும்பட்சத்தில் புதிதாக 50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனியார் பயணிகள் வாகனங்கள், சரக்கு போக்குவரத்து வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றும்பட்சத்தில் புதிய வேலைகளை உருவாக்க முடியும்.

பசுமை வாகனங்களை ஊக்குவிக்கும்போது குறைந்த அளவே கிரீன் ஹவுஸ் வாயுக்கள் வெளியாகும். இது தவிர காற்று, ஒலி மாசு குறையும், போக்குவரத்து நெரிசல் குறையும். இதன் காரணமாக ஏற்படும் சாலை விபத்துகளும் குறையும்.

போக்குவரத்துத் துறையைப் பசுமையாக்குவதோடு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கத் திறன் மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு, தொழிலாளர் நலக் கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் விரிவான கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு பரிந்துரைத்துள்ளது.

இதையும் படிங்க: 'EPFO அமைப்புக்கு மார்ச் மாத வருமானம் பாதியாக குறைந்துள்ளது'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.