ETV Bharat / business

தொடர்ந்து நான்காவது நாட்களாக பெட்ரோல், டீசல் விலை குறைவு - பெட்ரோல், டீசல் விலை குறைவு

டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்ததின் எதிரொலியாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து விற்பனையாகி வருகிறது.

Petrol, diesel prices cut
Petrol, diesel prices cut
author img

By

Published : Mar 8, 2020, 7:06 PM IST

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கச்சா எண்ணெய் நிறுவனங்கள் கடும் சரிவைச் சந்தித்தாலும் ஒரு புறம் மகிழ்ச்சி அளித்துள்ளது. அதாவது நாளுக்கு நாள் அதிகரித்து வந்த பெட்ரோல், டீசல் விலை சரிந்துள்ளது.

அதாவது, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி டெல்லியில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 71 ரூபாயாகவும் விற்பனை ஆகிவருகிறது. மேலும் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு, தற்போது தான் விலை சரிந்துள்ளது. மேலும் டீசல் விலை, 12 ஆண்டுகள் கண்டிடாத சரிவைக் கண்டுள்ளது.

இந்நிலையில், இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தற்போது உள்ள நிலையில் இருந்து 18 முதல் 20 பைசா குறைந்துள்ளது. முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலையும் மேலும் குறையக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

என்னதான் பெட்ரோல், டீசல் விலை சரிவு பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், கச்சா எண்ணெய் நிறுவனங்கள் 9 விழுக்காடு வரை சரிவைச் சந்தித்து வருகின்றன.

இதையும் படிங்க: ரயில்வே பயணிகள் பாதுகாப்பாக உள்ளார்களா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.