ஓடிஓ கேப்பிட்டல்ஸ் என்னும் ஸ்டார்ட் அப் நிதி நிறுவனம், இரண்டு சக்கர வாகனங்களை வாங்க கடன் வழங்கிவருகிறது. இந்நிலையில், 30 டீலர்களுடன் இணைந்து சென்னை சந்தையில் இந்நிறுவனம் களமிறங்கவுள்ளது.
ஆன்லைன், ஆஃப்லைன் என இரண்டின் மூலமாகவும் ஓடிஓ கேப்பிட்டல்ஸ் சேவைகளை அளித்துவருகிறது. 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள், 75 டீலர்களுடன் இணைந்து 3,000 இரு சக்கர வாகனங்களை லீஸில் விட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
வீட்டிலிருந்தபடியே, சோதனை ஓட்டத்தை மேற்கொள்ளவும் 2021 மார்ச் மாதத்திற்குள் ஹோம் டெலிவரி முறையை கொண்டு வரவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களிலும் சேவைகள் விரிவுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 30 விழுக்காடு இஎம்ஐ வட்டியைவிட குறைவான வட்டியில் அனைத்து பிராண்ட்களின் வாகனங்களையும் வாங்க ஓடிஓ கேப்பிட்டல்ஸ் வழிவகை செய்கிறது.