கரோனா வைரஸ் (தீநுண்மி) காரணமாக தொழிலில் ஏற்பட்ட சரிவால் தனது நிறுவனத்தில் பணிபுரியும் 15 விழுக்காட்டினர் அதாவது 10,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவுள்ளதாக உலகளவில் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான பிரிட்டிஷ் பெட்ரோலியம் தெரிவித்துள்ளது.
இதன் தலைமைச் செயல் அலுவலர் பெர்னார்ட் லூனி கூறுகையில், "தொழிலில் இழப்பு ஏற்படும் சூழலில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வது தவிர்க்க முடியாதது; அதுவே சரியான முடிவாகவும் இருக்கும்.
பல லட்சக்கணக்கில் முதலீடு செய்யும்போது இழப்பு ஏற்பட்டால் மிகப்பெரிய அளவிலேயே நிகழும். எனவே அதைச் சரிசெய்ய வேண்டும் என்றால் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டும்.
தற்போது பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தில் 70 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இதில் 15 விழுக்காடு ஊழியர்களை இந்தாண்டு இறுதிக்குள் பணிநீக்கம் செய்யவுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: உயிருக்கு உத்தரவாதம் இல்லை: உயர் நீதிமன்றத்தை நாடிய 2 வயது குழந்தை