கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. இதுவரை 1,251 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவலகைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மருத்துவர்கள், காவல் துறையினர், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பணியை மேற்கொள்பவர்கள் தவிர மற்ற அனைவரும் வீட்டிலிருந்தபடியே பணி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், ஊரங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மார்ச் 31ஆம் தேதியுடன் ஓய்வு பெறவிருப்பவர்களின் பணி நீடிக்கப்படலாம் என்ற செய்தி பரவியது. இணையத்தில் மிக வேகமாகப் பரவிவரும் இத்தகவலுக்கு பணியாளர் துறை அமைச்சகம் தற்போது விளக்கமளித்துள்ளது.
அதாவது, இந்திய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது போல் அடிப்படை உரிமைகள் விதி எண் 56இன் கீழ் மார்ச் 31ஆம் தேதியுடன் ஓய்வு பெறவிருப்பவர்களின் வழக்கம்போல் ஓய்வு பெறுவார்கள் என்று பணியாளர் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தற்போது வீட்டிலிருந்து பணிபுரிபவர்களுக்கும் பொருந்தும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா - ஸ்பைஸ்ஜெட் பணியார்களுக்கு சம்பளம் கட்!