ETV Bharat / business

குளிர்சாதன பெட்டிகள் விலை ரூ. 6 ஆயிரம் அதிகரிக்கும்.!

author img

By

Published : Nov 23, 2019, 7:01 PM IST

மும்பை: புதிய விதிகள் அமலுக்கு வரவுள்ள நிலையில், ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை 5 ஸ்டார் ரக குளிர்சாதன பெட்டிகளின் விலை அதிகரிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

New energy label norms: Five-star refrigerators to cost Rs 6,000 more

குளிர்சாதன பெட்டிகள் வருகிற 2020ஆம் ஆண்டு முதல் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை அதிகரிக்க உள்ளது. இதுகுறித்து நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் உபகரணங்கள் உற்பத்தியாளர்கள் (Consumer Electronics and Appliances Manufacturers Association) சங்கத் தலைவர் கமல் நந்தி (Kamal Nandi) கூறியிருப்பதாவது:-

குளிர்சாதன பெட்டிகள் தொடர்பான புதிய விதிகள் வருகிற 2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வருகிறது. அப்போது 5 நட்சத்திர குறியீடு கொண்ட குளிர்சாதன பெட்டிகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை விலை உயரும். இது வியாபாரிகள் முதல் வாடிக்கையாளர்கள் வரை பாதிப்பை ஏற்படுத்தும். தற்போதுள்ள குளிர்சாதன பெட்டிகளின் விலையும் அதிகரிக்கும் என்றார்.

2018-19 வரையிலான நடப்பாண்டில் மின்னணு பொருட்களின் விற்பனை உயர்ந்து காணப்பட்டது. குறிப்பாக ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான 6 மாதத்தில் குளிர்சாதன பெட்டிகள் உள்ளிட்டவை 15 சதவீதம் வரை வளர்ச்சி கண்டிருந்தது. இந்த நிலையில் மின்னணு பொருட்கள் அடுத்துவரும் காலங்களில் கடுமையான விலையேற்றத்தை அடையவுள்ளன. இது விற்பனை, லாபத்தை பாதிக்கும் என்று வியாபாரிகள் அஞ்சுகின்றனர்.

இதையும் படிங்க: தங்கம் விலை ஒரே நாளில் ரூ.232 உயர்வு!

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/business/business-news/new-energy-label-norms-five-star-refrigerators-to-cost-rs-6000-more/na20191123123217637

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.