டெல்லி: இந்தியாவில் முன்னணி மின்னணு வணிக சந்தையாக அமேசான் திகழ்கிறது. இந்நிலையில் முகேஷ் அம்பானியின், ரிரையன்ஸ் லிமிடெட் நிறுவனமும் இந்தப் போட்டியில் குதித்துள்ளது.
இதில் நிலவும் கடுமையான போட்டியை கருத்தில் கொண்டு ரிலையன்ஸ் நிறுவனம் ஆன்லைன் வர்த்தகத்தில் மருந்து, துணிகள் உள்ளிட்ட வணிகத்தில் ஈடுபடும் சில நிறுவனங்களை வாங்கும் முயற்சியில் அதனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகிறது.
பால் பொருள்கள் நிறுவனமும் இந்த இலக்குகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும், கிஷோர் பியான் குழுமத்தின் சில்லறை சொத்துக்களின் முழு அல்லது பகுதிகளைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், பியான் குழுமத்தின் சில்லறை வணிகங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் குறித்த ஊகங்கள் மற்றும் வதந்திகள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) முன்பு தெளிவுபடுத்தியது.
இருப்பினும், எதிர்கால சாத்தியமான ஒப்பந்தங்கள் குறித்து இந்திய பங்குச்சந்தைகளுக்கு தெளிவுபடுத்துவதில் ரிலையன்ஸ் நிறுவனம் பதிலளித்தது. நிறுவனம் தொடர்ந்து பல்வேறு வாய்ப்புகளை மதிப்பீடு செய்துகொண்டிருக்கிறது.
2017ஆம் ஆண்டு சந்தையில் பல்வேறு நிறுவனங்களை வாங்கியதைப்போல் அம்பானி இப்போது மீண்டும் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தும் யுஜிசி முடிக்கு கல்வித்துறை அமைச்சர் ஆதரவு