மும்பை: ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனத்தில் 6,247 கோடி ரூபாய் முதலீடு செய்ய முபாடாலா நிறுவனம் முடிவுசெய்துள்ளது.
செப்டம்பர் 30ஆம் தேதி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்.ஐ.எல்.), தனியார் ஈக்விட்டி நிறுவனமான சில்வர் லேக்கின் இணை முதலீட்டாளர்கள் கூடுதலாக 1,875 கோடி ரூபாய் அதன் ரீடெயில் பிரிவில் முதலீடு செய்வார்கள்" என்று அறிவித்துள்ளது.
இது சில்வர் லேக், ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் (ஆர்.ஆர்.வி.எல்.) ஆகியவற்றில் அதன் இணை முதலீட்டாளர்களின் ஒருங்கிணைந்த முதலீட்டை 2.13 விழுக்காடு பங்குகளுக்கு ஈடாகவும், ரூ.9,375 கோடியாகவும் கொண்டுள்ளதைக் காட்டுகிறது.
ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் ரூ. 5,550 கோடியை முதலீடு செய்யும் கேகேஆர்!
ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனம் சில வாரங்களாக முதலீட்டாளர்களின் ஆர்வத்தைப் பெருக்கிவருகிறது. ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனம், இந்தியாவின் பெரிய, வேகமாக வளரும், மிகுந்த லாபகரமான சில்லறை வர்த்தக நிறுவனமாகச் செயல்பட்டுவருகிறது. அந்த நிறுவனம், நாடு முழுவதும் 12,000 கடைகளின் வாயிலாக 64 கோடி மக்களுக்கு சேவை செய்துவருகிறது.
ஜூன் மாதத்தில் முபாடாலா நிறுவனம் ஜியோ நிறுவனத்தில் 9,093 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்த பல முதலீட்டாளர்களின் கவனம் ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனத்தின் மீது திரும்பியுள்ளது. முபாடாலா அபுதாபியின் இரண்டாவது பெரிய அரசு நிறுவனமாகும். இது 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் பல பெரும் தொழில்களைச் செய்துவருகிறது. முபாடாலா குறிப்பாக, நிறுவனங்களின் மீது முதலீடு செய்துவருகிறது.
பணமழையைப் பொழியும் ஜியோ பங்குகள்... 13ஆவது நிறுவனமாக வந்த கூகுள்!
அதன்மூலம், நேர்மறையான பொருளாதாரம், வீட்டிலிருக்கும் மக்கள் மீது சமூகத் தாக்கம் ஆகியவற்றை ஏற்படுத்திவருகிறது. அதனுடைய பட்டியலில் வரும் நிறுவனங்கள், விண்வெளி, விவசாயத் தொழில், தொலைதொடர்பு தொழில்நுட்பம், சுரங்கம் மற்றும் உலோகம் உள்ளிட்ட தொழில்களைக் கொண்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு விதமான தொழில்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.