மார்ச் மாத வாகன விற்பனை விவரங்கள் குறித்து முன்னணி நிறுவனங்களான மாருதி சூசுகி, டோயோட்டா கிர்லோஸ்கர் அறிவிக்கை வெளியிட்டுள்ளன. இந்த இரு நிறுவனங்களின் விற்பனையும் கடந்த மாதம் சிறப்பான உயர்வைக் கண்டுள்ளன.
அதன்படி, 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் மாருதி நிறுவனம் 83 ஆயிரத்து 792 வாகனங்களை விற்பனை செய்த நிலையில், 2021 மார்ச்சில் அது ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 14 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்தாண்டை விட இரு மடங்கு அதிகமாகும்.
அதேபோல், டோயோட்டா நிறுவனம் 2020ஆம் ஆண்டு மார்ச்சில் 7,023 வாகனங்களை விற்பனை செய்த நிலையில், 2021 மார்ச்சில் 15 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்துள்ளது.
2013ஆம் ஆண்டுக்குப் பின் அதிக அளவிலான உள்நாட்டு விற்பனையை டோயோட்டா நிறுவனம் எட்டியுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் நவீன் சோனி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி-மார்ச் காலாண்டு விற்பனை சிறப்பான இலக்கை எட்டிய நிலையில், 2021இல் பண்டிகை கால விற்பனை மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய மாடல்களான இனோவா கிரிஸ்டா, புதிய பார்ட்சுனர் ஆகியவற்றுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஜிஎஸ்டி வசூலில் மீண்டும் சாதனை!