இன்றைய வர்த்தக நேரம் இறுதியில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 465.86 புள்ளிகள் (1.29 விழுக்காடு) உயர்ந்து 36,487.28 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 156.30 புள்ளிகள் (1.47 விழுக்காடு) உயர்ந்து 10,763.65 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
எம் & எம் நிறுவனத்தின் பங்குகள் அதிகபட்சமாக ஏழு விழுக்காடு வரை ஏற்றமடைந்தது. அதேபோல் பஜாஜ் பைனான்ஸ், டாடா மோட்டர்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தில் தங்கள் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
மறுபுறம் பாஜாஜ் ஆட்டோ, ஏர்டெல், விப்ரோ, உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன.
இந்திய ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 பைசா குறைந்து 74.60 ரூபாய்க்கு வர்த்தகமானது.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 0.21 விழுக்காடு குறைந்து, பேரல் ஒன்று 43.01 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமாகி வருகிறது.
இதையும் படிங்க: ஜூம் செயலிக்கு சிறந்த மாற்றாக இருக்குமா ஜியோ மீட்?