இன்றைய வர்த்தக நாள் முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 31.71 புள்ளிகள் உயர்ந்து 40,625.51 புள்ளிகளிலும், தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 3.55 புள்ளிகள் உயர்ந்து 11,934.50 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவுசெய்தன.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்:
அதிகபட்சமாக ஹெச்.சி.எல் டெக் நிறுவன பங்குகள் சுமார் 4.05 விழுக்காடு உயர்வைச் சந்தித்தது. அதற்கு அடுத்தபடியாக இன்போசிஸ், கோடக் வங்கி, ரிலையன்ஸ், அல்ட்ரா சிமெண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் அதிக உயர்வை சந்தித்தன. அதேவேளை, சிப்லா, டைடான், அதானி துறைமுகம், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டன.
தங்கம், வெள்ளி விலை:
சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 48,650 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை ஒரு கிலோ 60 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையானது.
பெட்ரோல், டீசல் விலை:
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 84 ரூபாய் 14 காசுகளுக்கும், டீசல் 75 ரூபாய் 95 காசுகளுக்கும் விற்பனையானது.
இதையும் படிங்க: உலக உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கை: நிதி ஆயோக் தலைவர்