திப்ருகர் (அசாம்): மனோகரி தேயிலைத் தூள் 75 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனதால் மூன்று ஆண்டுகளாக அதிக விலை கோரப்பட்ட தேயிலைத் தூள் என்ற சாதனையை தக்கவைத்துள்ளது.
2018ஆம் ஆண்டில் நடந்த ஏலத்தில் கிலோவுக்கு ரூ.39,001 ஏலம் போனது. தொடர்ந்து 2019இல் 50,000 ரூபாய்க்கு ஏலம்போன இந்த தேயிலை. தற்போது 75,000க்கு ரூபாய்க்கு ஏலம் கோரப்பட்டு வரலாற்றுச் சாதனைப் புரிந்துள்ளது.
இந்த முறை அதிக விலை கேட்டு ஏலத்தை தன் வசப்படுத்தியது விஷ்னு தேயிலை நிறுவனம். இதனை கடைகளிலோ அல்லது www.9amtea.com என்ற இணையதளத்திலோ, வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பார்த் லோஹியா, “மொத்தமாக இந்த ஆண்டு 2.5 கிலோ கோல்ட் ரக தேயிலை கையால் தயாரிக்கப்பட்டது. அதில் 1.2 கிலோ ஏலத்தில் விற்கப்பட்டது. மீதமுள்ளவை ஜி.டி.ஐ.சி அங்காடிகள் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனை நிலையங்களில் கிடைக்கும்” என்று கூறினார்.
ஒரு லட்சம் டன் வெங்காயத்தை சந்தைப்படுத்த மத்திய அரசு முடிவு!