ETV Bharat / business

'லாக்டவுன் கரோனாவை தடுக்காமல் நாட்டின் வளர்ச்சியைத்தான் தடுத்துநிறுத்தியுள்ளது' - ராகுல் பஜாஜ் ராகுல் காந்தி

டெல்லி: கரோனா பாதிப்பைத் தடுக்கும் விதமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கரோனா பரவலை விடுத்து, பொருளாதாரத்தைத்தான் தடுத்து நிறுத்தியுள்ளது என பிரபல தொழிலதிபர் ராகுல் பஜாஜ் தெரிவித்துள்ளார்.

Bajaj
Bajaj
author img

By

Published : Jun 4, 2020, 3:38 PM IST

கரோனா காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு குறித்து, முன்னணி தொழிலதிபரான ராகுல் பஜாஜ், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் கலந்துரையாடினார். அப்போது இந்தியத் தொழில் துறையில் கரோனா ஏற்படுத்திய தாக்கம் குறித்து விரிவாகப் பேசப்பட்டது.

உரையாடலில் ராகுல் பஜாஜ், ”ஜப்பான், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகள் தங்களின் பொருளாதார நடவடிக்கைகள் முற்றிலும் முடங்காத வகையில், பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளில் தகுந்த நபர் இடைவெளியுடன் வர்த்தக நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகின்றன.

ஆனால், இந்தியாவில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு பொருளாதார ரீதியான தாக்கத்தை மட்டுமல்லாது, மக்களின் அடிப்படை தேவைகளை ஆட்டம்காணச் செய்துள்ளது. இந்த அறிவிப்பு கரோனா பரவலைத் தடுக்கும் என எதிர்பார்த்த நிலையில், நாட்டின் வளர்ச்சியைத்தான் தடுத்து நிறுத்தியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புக்குப்பின் பல்வேறு துறை சார்ந்த முக்கிய நபர்கள், வல்லுநர்களுடன் ராகுல் காந்தி தொடர்ச்சியாக உரையாடிவருகிறார். முன்னதாக, ரகுராம் ராஜன், ஆஷிஷ் ஜா ஆகியோருடன் ராகுல் காந்தி பேசிவருகிறார். அடுத்ததாக பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடன் பேசவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஜி20 நாடுகளிடம் நிதி கோரும் 225 முக்கியப் பிரமுகர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.