ETV Bharat / business

சேமிப்பு இருப்புத் தொகை மீதான வட்டி விகிதத்தைக் குறைத்த கோட்டக் மஹிந்திரா - கோட்டேக் மஹிந்திரா

இந்திய குடிமக்களின் கணக்குகளுக்கு மட்டும் சேமிப்பு இருப்புத் தொகை மீதான வட்டி விகிதத்தைக் குறைத்து கோட்டக் மஹிந்திரா வங்கி அறிவித்துள்ளது

கோட்டேக் மஹிந்திரா வங்கி
கோட்டேக் மஹிந்திரா வங்கி
author img

By

Published : May 25, 2020, 9:41 PM IST

தனியார் வங்கியான கோட்டக் மஹிந்திரா வங்கி (கே.எம்.பி) சேமிப்பு இருப்புத் தொகை மீதான வட்டி விகிதத்தை மேலும் 0.50 விழுக்காடு குறைத்துள்ளது.

கடந்த மாதம் ஏற்கனவே இந்த வட்டி விகிதத்தை இரண்டு முறை கோட்டக் மஹிந்திரா குறைத்துள்ள நிலையில், தற்போது மேலும் 0.50 விழுக்காட்டை குறைத்து அறிவித்துள்ளது.

தினசரி இருப்புத்தொகையானது, ஒரு லட்சத்துக்கு மேல் பராமரிப்பில் இருக்கும்பட்சத்தில், முந்தைய 4.50லிருந்து 4 விழுக்காடாக குறைத்தும், ஒரு லட்சத்திற்கு குறைந்த இருப்புத் தொகைக்கு 3.50 விழுக்காடாக குறைத்து வட்டிவிகிதத்தை அறிவித்துள்ளது.

இந்த வட்டிவிகிதத் திருத்தங்கள், இந்திய குடிமக்களின் வங்கிக் கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பிரதான வங்கியான பாரத ஸ்டேட் வங்கிதான், தற்போது மிகவும் குறைவான சேமிப்பு இருப்புத் தொகைக்கான வட்டிவிகிதத்தை ( 2.75% ) அளித்து வருகிறது. இதர வங்கிகளான யெஸ் வங்கி உள்ளிட்ட வங்கிகளும் இருப்புத் தொகை மீதான வட்டி விகிதத்தை விரைவில் குறைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க : அமேசானுக்கு அள்ளிக்கொடுக்கும் சேவை இதுதான்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.