நடப்பாண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜியோ நிறுவனத்தின் சுமார் 25 விழுக்காடு பங்குகள் விற்கப்பட்டு, ஒரு லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை ரிலையன்ஸ் குழுமம் பெற்றுள்ளது.
அதன்படி, பேஸ்புக் நிறுவனத்திடம் 9.99 பங்குகள் விற்கப்படும் என ரிலையன்ஸ் குழுமம் அறிவித்திருந்தது. இந்நிலையில் வெளிவந்த தகவல் படி அந்த ஒப்பந்தம் நடந்து முடிந்தது தற்போது ஜியோ நிறுவனத்தின் 9.99 பங்குகள் பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தம் என மும்பை பங்குச்சந்தை அறிவித்துள்ளது.
மேலும் இந்தப் பங்குகளை விற்பனை செய்ததில் ஜியோ நிறுவனத்திற்கு 43,574 கோடி ரூபாய் கிடைத்துள்ளது எனவும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனத்தின் நிதி பரிவர்த்தனையை விசாரிக்க குழு!