ETV Bharat / business

கூட்டுறவு வங்கிகளின் மோசடிகளுக்கு ரிசர்வ் வங்கியின் பொறுப்பு! - சிஏஜி ராஜீவ் மகரிஷியின் கேள்வி

நெருக்கடியால் பாதிக்கப்பட்ட கூட்டுறவு வங்கிகளை நிதி ரீதியாக பொதுத்துறை வங்கிகளுடன் இணைத்து தனது பொறுப்பை தட்டிக்கழிக்கும் ரிசர்வ் வங்கி, பொதுத்துறை வங்கிகளில் பரவலான மோசடிகள் நடக்கும்போது எதுவும் செய்ய முடியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது.

RBI
RBI
author img

By

Published : Oct 3, 2020, 6:30 PM IST

கூட்டுறவு வங்கிகளின் நடைபெறும் மோசடிகளை முடிவுக்குக் கொண்டு வரவும், நிர்வாகத்தை சீர்திருத்தவும் இந்திய ரிசர்வ் வங்கி முயற்சி எடுக்க வேண்டும் என்று ஆர்.காந்தி குழு சில ஆண்டுகளுக்கு முன்பு பரிந்துரைத்திருந்த போதிலும், மத்திய அரசு இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க தயங்கி வருகிறது.

பஞ்சாப்-மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் (PMC), ஏழு மாநிலங்களைச் சேர்ந்த ஒன்பது லட்சம் வாடிக்கையாளர்களின் வைப்புநிதி சம்பந்தப்பட்ட ரூ.11,614 கோடி நிதி மோசடி கடந்த ஆண்டு வெளிவந்த போது நாடே அதிர்ச்சியடைந்தது. கூட்டுறவு வங்கித் துறையில் மக்கள் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்காக மத்திய அரசு சமீபத்தில் வங்கி ஒழுங்குமுறை (திருத்த) மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

நாடு முழுவதும் 1482 நகர்ப்புற மற்றும் பிற 58 பல மாநில கூட்டுறவு வங்கிகளில் 8.6 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். கூட்டுறவு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள மொத்த தொகை கிட்டத்தட்ட ஐந்து லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

277 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளின் நிதி நிலை பலவீனமாக இருப்பதாகவும், 105 வங்கிகளால் விதிமுறைகளின்படி குறைந்தபட்ச முதலீட்டு இலக்கை அடைய முடியவில்லை என்றும் 328 வங்கிகளில் 15 விழுக்காட்டிற்கும் அதிகமான வாராக்கடன் இருக்கிறது என்றும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.

கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகளில் செயல்திறனை மேம்படுத்துவது, மூலதன கையகப்படுத்துதலுக்கான புதிய வழிகளைத் உருவாக்குவது, நிர்வாகத்தை மேம்படுத்துவது, முதலீட்டாளர்கள் நலன்களைப் பாதுகாப்பது போன்றவற்றை ரிசர்வ் வங்கி கண்காணிக்க அரசு வழிவகுத்துள்ளது. கூட்டுறவு சுயாட்சி மற்றும் ஒரு உறுப்பினருக்கு ஒரு வாக்கு என்ற சமமான வாக்குரிமையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதில் திருப்தி அடைவதாக மகாராஷ்டிரா கூட்டமைப்பு மற்றும் பலர் அறிவித்துள்ளனர். ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையின் கீழ் நிலைமை மேம்படும் என்ற நம்பிக்கையானது, யதார்த்தத்திற்கு வெகு தொலைவில் உள்ளது.

முடக்கப்பட்ட மற்றும் மோசடி நிறைந்த PMC வங்கியை ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்த ஒரு வருடத்திற்கு பிறகு, முதலீட்டாளர்கள் நிலைமை மேலும் மோசமடைந்து, அவர்களின் நிலை சட்டியிலிருந்து தீயில் விழுந்தது போலானது. உண்மையில், ரிசர்வ் வங்கி ஊழியர்கள் கூட்டுறவு சங்கங்களின் பணம் கிட்டத்தட்ட ரூ.200 கோடி கூட்டுறவு வங்கிகளிடம் சிக்கிக்கொண்டதால் நிலைமையை எவ்வாறு சரிசெய்வது என்பதில் பெரும் குழப்பம் நீடிக்கிறது.

ரிசர்வ் வங்கி 1935இல் தொடங்கப்பட்டது. 1947 இல் நாடு சுதந்திரம் அடைந்த நேரத்தில், நூற்றுக்கணக்கான வங்கிகள் மோசமான நிதி நிலைமையுடன் இருந்தன. 1947 - 1969க்கு இடைப்பட்ட காலத்தில் 665 வங்கிகளும் பின்னர் 2019 வரை 37 வங்கிகளும் மூடப்பதாக பதிவுகள் காட்டுகின்றன. ரிசர்வ் வங்கியின் முழு கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறை அதிகாரங்கள் இருந்தபோதிலும் அதனால் வங்கிகளின் தோல்விகளைத் தடுக்க முடியவில்லை என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

நெருக்கடியால் பாதிக்கப்பட்ட கூட்டுறவு வங்கிகளை நிதி ரீதியாக பொதுத்துறை வங்கிகளுடன் இணைத்து தனது பொறுப்பை தட்டிக்கழிக்கும் ரிசர்வ் வங்கி, பொதுத்துறை வங்கிகளில் பரவலான மோசடிகள் நடக்கும்போது எதுவும் செய்ய முடியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது. 2018 மார்ச் மாத இறுதியில் ரூ.9.61 லட்சம் கோடியாக இருந்த வங்கித் துறையின் வாராக்கடன்களை பற்றி குறிப்பிடுகையில், 'இந்த நெருக்கடிக்கு ரிசர்வ் வங்கி பொறுப்பேற்கிறதா இல்லையா?' என்ற சிஏஜி ராஜீவ் மகரிஷியின் கேள்வி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கித் துறையில் நடைபெற்ற பெரும் மோசடிகளை மேற்கோள் காட்டி, ஆடிட்டர் ஜெனரல் சஷிகாந்த் சர்மா, ரிசர்வ் வங்கி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஒரு சிஏஜி தணிக்கையை செய்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில், கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளான வங்கிகளுக்கு உதவ மத்திய அரசு மூன்றரை லட்சம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது.

வங்கிகளில் நடைபெற்ற மோசடிகளை கண்டறிவதற்கு வங்கிகளுக்கு ஐந்து வருடங்கள் ஆகியுள்ளது என்பது, ரிசர்வ் வங்கியின் முடிவெடுக்கும் திறன் மற்றும் கண்காணிப்பு திறன் ஆகியவற்றை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. கடுமையான சீர்திருத்தங்களை ரிசர்வ் வங்கி செயல்படுத்துவதற்கு முன்பை விட இப்போது அதிக அவசியம் உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.