வாகனங்களுக்கான காப்பீடு சட்ட விதிகளில் புதிய மாற்றங்களை இந்தியக் காப்பீடு துறையின் தலைமை அமைப்பான ஐ.ஆர்.டி.ஏ.ஐ. அறிவித்துள்ளது. அதன்படி, இரண்டு சக்கர வாகனம், கார்களுக்கான நீண்டகால மூன்றாம் நபர் காப்பீடை விலக்கிக்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றம் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைமுறையில் உள்ள நீண்டகால காப்பீடு என்பது பல்வேறு காப்பீடு நிறுவனங்களுக்கு பெரும் சுமை மற்றும் நடைமுறைச் சிக்கலை உருவாக்குகிறது. இதையடுத்து நிறுவனங்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய சூழலில் பல நிறுவனங்கள் நிதிச்சுமை காரணமாக பெரும் நெருக்கடியைச் சந்தித்துவருகின்றன. இந்த நிதிச்சுமை காரணமாக துறை பெரும் முடக்கத்திற்கு ஆளாகாமல் இருக்கவே ஐ.ஆர்.டி.ஏ.ஐ அமைப்பு இதுபோன்ற அதிரடி மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'அரசின் திட்டங்கள் சிறு, குறு நிறுவனங்களுக்கு செல்ல வேண்டும்' - நிர்மலா சீதாராமன்