ஊரடங்கு காலத்தின்போது, வங்கிக் கடன்களுக்கான வட்டி விகித தள்ளுபடி என்பது, வைப்புத் தொகையாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று அகில இந்திய வங்கி வைப்புத்தொகை சங்கம் (AIBDA) கூறியுள்ளது. மேலும் எந்தவொரு வட்டித் தள்ளுபடியும் கடன் கலாசாரத்தையும், வங்கிகளின் நிதி ஆரோக்கியத்தையும் பாதிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
இதுவரை வரலாற்று ரீதியாக, கடன் வட்டித் தள்ளுபடி எந்த ஒரு பாதகத்தையும் விளைவித்தது இல்லை. ஆனால், இந்தச் சூழ்நிலையில் இது மாநில அளவில் நிதிப் பற்றாக்குறையை ஏற்படுத்தும்.
இதற்கிடையில், ஜூன் 12ஆம் தேதி, உச்ச நீதிமன்றம், மத்திய மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி இரண்டும் மூன்று நாட்களுக்குள் ஒரு கூட்டத்தை நடத்துமாறும்; அதில் இது போன்ற கடன் திட்டத்தைப் பற்றி ஒரு முடிவு எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நிலைமை நீடித்துக் கொண்டே சென்றால், வங்கி மற்றும் வாடிக்கையாளர்கள் இருவருமே பாதிக்கக்கூடும் என இந்திய வங்கி வைப்புத்தொகை சங்கம் (AIBDA) கூறியுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவில் ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் சீனா!