கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்திய பொருளாதாரம் சரிவை சந்திக்கும் நிலையில் கரோனா பாதிப்பால் இந்திய பொருளாதாரம் மீண்டும் கடும் சரிவை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் FY20 நிதி ஆண்டுக்கான Q4 காலாண்டின் முடிவுகள் இந்த மாதம் 29ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில் எஸ்பிஐ Q4 காலாண்டின் முடிவுகளை கணித்துள்ளது.
அதன்படி FY20 Q4 காலாண்டின் முடிவில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 1.2 விழுக்காடாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
FY20 Q1, Q2 காலாண்டுகளில் இந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி ஐந்து விழுக்காடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா சிகிச்சை: தனியார் மருத்துவமனைகளில் 2 ஆயிரம் படுக்கைகள் ஏற்பாடு!