இன்று பாராளுமன்றத்தில் பட்ஜெட் உரையை நிகழ்த்தினார் மத்திய அமைச்சர் (பொறுப்பு) பியூஷ் கோயல். பங்கு வர்த்தகர்கள் இடையேயும், சந்தை முகவர்களுக்கிடையும் பெருத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது இன்றைய இடைகால பட்ஜெட். காலை முதல் இதை கவனித்து வந்த வர்த்தகர்களுக்கு உரை துவங்கும் முன் வர்த்தக சந்தை எந்த பெரிய நகர்வும் இல்லாததால் வணிகத்தில் சுணக்கம் ஏற்பட்டது.
உரை துவங்கும் சிறிது நேரத்திற்கு முன் தன் ஆட்டத்தை துவங்கிய பங்கு சந்தை உச்சத்தில் வர்த்தகமானது. மும்பை பங்கு சந்தை குறியீடு எண் சென்செஸ் 400 புள்ளிகள் உயர்ந்தும், தேசிய பங்கு சந்தை குறியீடு எண் நிப்டி 150 புள்ளிகள் உயர்ந்தும் வர்த்தகமானது. தற்போதய நிலவரப்படி 79 புள்ளிகள் உயர்வுடன் 36336 புள்ளிகளுடனும், தேசியப் பங்கு சந்தை நிப்டி 13 புள்ளிகள் உயர்வுடன் 10844 வர்த்தகமாகிறது.
ஆட்டோமொபைல் துறை சார்ந்த பங்குகளான ஹீரோ, மாருதி, ஈச்சர் போன்ற நிறுவன பங்குகள் நல்ல வளர்ச்சி கண்டதும், வேதாந்தா போன்ற நிறுவன பங்குகள் வர்த்தகர்களால் பெரிதும் வாங்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்பின் மந்தநிலையின் போக்கை கொண்டும் இன்றைய வர்த்தக நாள் அமைந்தது.