ETV Bharat / business

பட்ஜெட் 2020: வரி விலக்கை எதிர்பார்க்கும் வரி வல்லுநர்கள் - இந்திய பட்ஜெட் 2020

ஐதராபாத்: இந்த ஆண்டுக்கான பட்ஜெட், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பொது மக்கள் செலுத்தும் வருமான வரியில் விலக்கு அல்லது நிவாரணம் வழங்கவேண்டும் என வரி வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து மூத்த பத்திரிகையாளர் கிருஷ்ணானந்த் திரிபாதி எழுதிய சிறப்பு கட்டுரை இதோ...

Tax Cuts
Tax Cuts
author img

By

Published : Jan 24, 2020, 10:43 PM IST

Updated : Jan 25, 2020, 6:55 AM IST

மத்திய பட்ஜெட் இன்னும் சில நாட்களில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், வருமான வரி செலுத்துவோர் கூச்சலிட ஆரம்பித்துவிட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும். வரி விலக்கு, நிவாரணம் என எதிர்பார்ப்புகள், வரி செலுத்துவோர் மத்தியில் வலுத்துக்கொண்டே செல்கிறது.

வரி செலுத்துவோர் வெளிப்படையாக வருமான வரி விகிதங்களைக் குறைக்க விரும்புகிறார்கள். தனிநபர் வருமான வரியைக் குறைத்தல், வேறு சில வரிகளுக்கு விலக்கு அளிக்கப்படலாம் அல்லது அகற்றப்படலாம் என வரி வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மத்திய அரசு, கடந்தாண்டு இடைக்கால பட்ஜெட்டில் பிரிவு 87ஏ (87A)இன் கீழ் சில மாற்றங்களை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் ஐந்து லட்சம் வரை வரி செலுத்துவோருக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. இதனால் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் வீடு, வாகனங்கள் போன்றவற்றை மக்கள் அதிகம் வாங்குவார்கள் என மத்திய அரசு திட்டமிட்டது.

இதன் அடிப்படையில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் நடப்பு ஆண்டு பட்ஜெட்டில், சாமானிய மக்கள் செலுத்தும் வரியில், வரி விலக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

சேவிங்ஸ் அக்கௌன்ட்(Savings Account) என்று அழைக்கப்படும் சேமிப்பு கணக்கு, நிலையான வைப்புகளிலிருந்தும்(fixed deposit) வட்டி வருமானத்திற்கு அரசாங்கம் அதிக நிவாரணம் வழங்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்," என்று டெல்லியைச் சேர்ந்த வரி வல்லுநர் கே.கே. மிட்டல் கூறியுள்ளார்.

மேலும் தற்போது 60 வயதிற்கு மேற்பட்டோர், சேமிப்பு கணக்கில் 50,000 ரூபாய் வரை வைத்திருந்தால் அவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது, 1961ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தின் 80 டிடிஏ பிரிவின் கீழ் ஒரு வருடத்திற்கு 10,000 ரூபாய் வரை வைத்திருந்தால் அவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய அரசு இந்த திருத்தம் கொண்டு வந்தது.

இந்த வரி விலக்கு வயது வித்தியாசம் பாராமல் அனைவருக்கும் வழங்கவேண்டும் என கே.கே. மிட்டல் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் சில்லறை பணவீக்கம் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 7.35 விழுக்காடாக உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில் இந்த சில்லறை பணவீக்கம் அதிகளவாக 7.39 விழுக்காடு அளவில் உயர்ந்திருந்திருந்தது.

இதனை சரிசெய்யவும், தற்போது நாட்டில் நிலவி வரும் பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்யவும் தனி நபர் வருமான வரியில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என கே.கே. மிட்டல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பட்ஜெட் 2020: அதிக செலவு & சரியாக செலவு

Last Updated : Jan 25, 2020, 6:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.