ETV Bharat / business

சொத்துக்களை விற்க ராகேஷ் வடாவன், சரங் வடாவன் கோரிக்கை! - பால்கன் 2000 விமானம்

டெல்லி: பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி முறைகேடு வழக்கில் சொத்துக்களை விற்க எச்.டி.ஐ.எல். நிறுவன உரிமையாளர்களான ராகேஷ் வடாவன், சரங் வடாவன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Repay PMC loans
author img

By

Published : Oct 17, 2019, 7:05 PM IST

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி 4 ஆயிரத்து 355 கோடி ரூபாயை முறைகேடாக எச்.டி.ஐ.எல் நிறுவனத்துக்கு வழங்கியதற்காக, இந்த வங்கி மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதில் முக்கிய குற்றவாளிகளாக பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி நிறுவனத் தலைவர் ராகேஷ் வடாவன், அவரது மகன் சரங் வடாவன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் ராகேஷ், சரங் ஆகியோர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று மத்திய நிதி அமைச்சகம், அமலாக்கத்துறை, ரிசர்வ் வங்கி ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் தங்களது சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்ட நிலையில், வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகைக்காக, தங்களது 18 சொத்துக்களை விற்க அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

18 சொத்துக்களில் பால்கன் 2000 விமானம்(Falcon 2000 Aircraft), சொகுசுப் படகு ((Dolphin super deluxe Speed Boat), சொகுசுக் கார்களான ரோல் ராய்ஸ்(Roll Royce), பிஎம்டபிள்யூ (BMW) கார்கள், பென்ட்லி(Bentley) போன்றவை இடம் பெற்றுள்ளன. மேலும் இதுவரை ₹3,830 கோடி ரூபாயை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: வாடிக்கையாளர்களை ஈர்த்த மையிண்ட் ட்ரீ பங்குகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.