மும்பையை தலைமையிடமாகக் கொண்டுசெயல்படும் ஹெச்.டி.எஃப்.சி. நிறுவனத்தின் சந்தை மூலதனம் ஏழு ட்ரில்லியனுக்கு மேல் உயர்ந்துள்ளதாக நேற்று அறிவித்துள்ளது.
1994ஆம் ஆண்டு இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. தற்போது இதன் தலைமை செயல் அலுவலராக ஆதித்யா பூரி பதவி வகித்துவருகிறார்.
கடந்த சில காலமாகவே சிறப்பாகச் செயல்பட்டுவரும் ஹெச்.டி.எஃப்.சி. நிறுவனத்தின் சந்தை மதிப்பு 7,00,252.30 கோடி ரூபாயாக நேற்று உயர்ந்துள்ளது. இந்த உயர்வால் இந்தியாவின் சந்தை மூலதனத்தில் மூன்றாவது இடத்தை ஹெச்.டி.எஃப்.சி. நிறுவனம் பிடித்துள்ளது.
மேலும் முதல் இடத்தில் 9,39,463.36 கோடி ரூபாயுடன் (அதாவது ஒன்பது லட்சத்து 39 ஆயிரத்து 463 கோடி ரூபாய்) ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் இரண்டாம் இடத்தில் 8,25,168.16 கோடி ரூபாயுடன்(அதாவது எட்டு லட்சத்து 25 ஆயிரத்து 168 கோடி ரூபாய்) டி.சி.எஸ். நிறுவனமும் இடம்பிடித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி பங்குச்சந்தையில் ஹெச்.டி.எஃப்.சி.யின் ஒரு பங்கு 1,278.90 என வர்த்தமாகியுள்ளது .
இதையும் படிங்க: எந்தக் கம்பெனியும் மூடவேண்டாம் - நிர்மலா சீதாராமன்