டெல்லி: ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரையின்படி, ஆடைகளின் மூலப்பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5 விடுக்காட்டில் இருந்து 12 விழுக்காடாக உயர்த்தப்படும் என்றும் இந்த நடைமுறை ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனால், ஜவுளி, ரெடிமேட் ஆடைகள் உற்பத்தியாளா்கள், விற்பனையாளா்கள், சங்க உறுப்பினர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து ஆடை உற்பத்தி சங்கங்கள் தெரிவிக்கையில், ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த ஜிஎஸ்டி வரி உயர்வு தொழில்துறையில் 85 விழுக்காடு தொழிலாளர்களை பாதிக்கும். பணவீக்கம் ஏற்படும். 15 லட்சம் பேருக்கு வேலை பறிபோகும்.
அதுமட்டுமல்லாமல் 1,000 ரூபாய்க்கும் கீழ் ஆடைகள் வாங்குவோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவர். இவர்களை நம்பி தொழில் செய்யும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படும் எனவே இந்த வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஜிஎஸ்டி வரியை 5 விழுக்காடாக குறைக்க வேண்டும்: ஜவுளித்துறை அமைச்சருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்