கரோனா பாதிப்பு அதைத்தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக நாடு முழுவதும் மிகப்பெரிய பொருளாதார முடக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கத்தை கடந்து வர்த்தக நடவடிக்கைகளை மீட்டெடுக்க மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, நிதியமைச்சகம் ஆகியவை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.
இத்தகையை சூழலில் ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டமானது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர்.
பல்வேறு மாநில அரசுகள் தங்களுக்குரிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை தொடர்ச்சியாக முன்வைத்துவருகின்றன. குறிப்பாக, கரோனாவை எதிர்கொள்வதில் பெரும் சவாலாக உள்ள நிலையில் தமிழ்நாடு அரசும் மத்திய அரசிடம் நிதி கேட்டுவருகிறது.
அதேபோல், மாநில அரசுகள் மட்டுமில்லாமல் தொழில் நிறுவனங்கள் சார்பிலும் இரு முக்கியக் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. அதன்படி, தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்பு குறித்து பட்டயக்கணக்கர் ப்ரிதம் முகுரே ஈடிவி பாரத் செய்திகளுக்குத் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
அவர் பேசுகையில், "2018-19ஆம் நிதியாண்டில் நிறுவனங்கள் செலுத்தவேண்டிய நிலுவைத் தொகைக்கான காலத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும், மேலும் 2019 -20 கிரெடிட் நோட்ஸ் எனப்படும் படிவம் தாக்கல்செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தொழில் நிறுவனங்கள் சார்பில் வைக்கப்படுகின்றன" என்றார்.
இதையும் படிங்க: இந்தியாவின் பொருளாதாரம் மிகச் சிறந்த மதிப்பீட்டைக் கொண்டிருக்கிறது!