ETV Bharat / business

உச்சம் தொட்ட ஜிஎஸ்டி வசூல்! - ஜிஎஸ்டி வசூல்

டெல்லி: இதுவரை இல்லாத அளவுக்கு, 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 1.15 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளது.

ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி
author img

By

Published : Jan 1, 2021, 5:07 PM IST

கடந்த 2017ஆம் ஆண்டு, ஜூலை மாதம், நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1.15 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரியாக வசூலாகியுள்ளது. முன்னதாக, அதிகபட்சமாக, 2019ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 1.14 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரியாக வசூலானது.

கடந்த 2019ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், 2020ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் அதிக அளவில் வரி வசூலாகியுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் இந்திய பொருளாதாரம் வரலாறு காணாத அளவில் சுருங்கிய நிலையில், தற்போது அதிக அளவில் வரி வசூலாகியுள்ளது பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்புவதை காட்டுகிறது.

ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் பொருளாதாரம் மந்தநிலை அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டு காலாண்டுகளில், நெகட்டிவ் வளர்ச்சி பதிவானால் அதனை மந்தநிலை எனக் குறிப்பிடுவோம். இந்நிலையில், நிதித்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "ஜிஎஸ்டி வரி வருவாய் வசூல் அதிகரித்து வருவது தொடர்ந்து வரும் நிலையில், 2019ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஜிஎஸ்டி வரிவருவாய் 11.6 விழுக்காடு அதிகரித்துள்ளது.

அதேபோல், பொருள்களை இறக்குமதி செய்வதால் ஈட்டப்படும் வருவாய் 27 விழுக்காடு அதிகரித்துள்ளது. உள்ளூர் பண பரிவர்த்தனை 8 விழுக்காடு அதிகரித்துள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.