ETV Bharat / business

’கடைய தெறங்க... மத்தத அப்புறம் பாக்கலாம்’ - டெஸ்லாவுக்கு வலைவிரிக்கும் அரசு! - டெஸ்லா எலெக்ட்ரிக் கார்

அமெரிக்க மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவுக்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. தொழிலைத் தொடங்கி நடத்தும்படியும், சலுகைகள் குறித்து வரும் நாள்களில் முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

Tesla, Govt invited Tesla, Govt wants Tesla production in India, Tesla in India coming soon, டெஸ்லா, டெஸ்லா நிறுவனம், எலான் மஸ்க், ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, டெஸ்லா மின்சார கார், டெஸ்லா எலெக்ட்ரிக் கார்
டெஸ்லா
author img

By

Published : Sep 11, 2021, 8:20 PM IST

டெல்லி: இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் தனது செயல்பாடுகளைத் தொடங்க இதுவே சரியான நேரம் என ஒன்றிய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மின்சார கார் பயனர்கள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான சந்தை வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது. இச்சூழலில், அமெரிக்க மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவுக்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

டெஸ்லாவுக்கு அழைப்பு

இந்நிலையில், தொழிலைத் தொடங்கி நடத்தும்படியும், சலுகைகள் குறித்து வரும் நாள்களில் முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும், இதுவே டெஸ்லா இந்தியாவில் கால்பதிக்க பொன்னான நேரம் என்றும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான இறக்குமதி வரிகளைக் குறைக்க டெஸ்லா கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது, முழுமையாக வடிவமைக்கப்பட்ட கார்களின் இறக்குமதிக்கு 60 விழுக்காடு முதல் 100 விழுக்காடு வரை சுங்க வரி வசூலிக்கப்படுகிறது.

எந்த நாட்டிலும் இல்லாத அளவு வரி

சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சகத்துக்கு டெஸ்லா எழுதியிருந்த கடிதத்தில், தற்போது இந்தியாவில் அமலில் உள்ள சொகுசு வாகனங்களுக்கான இறக்குமதி வரி, மின்சார வாகனங்களுக்கு செல்லுபடி ஆகாது என்று தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

ஜூலை மாதத்தில், டெஸ்லா தலைமை நிர்வாக அலுவலர் எலான் மஸ்க், மின்சார வாகனங்களுக்கான தற்காலிக கட்டண நிவாரணத்தை எதிர்பார்ப்பதாக ட்வீட் செய்தார்.

டெஸ்லா தனது கார்களை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த விரும்புவதாக மஸ்க் கூறியிருந்தார். ஆனால் இறக்குமதி வரிகள் உலகில் எந்த பெரிய நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் மிக அதிகமாக இருப்பது சிக்கலாக இருப்பதாகவும் அவர் வருத்தம் தெரிவித்திருந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.