மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். நவராத்திரி, தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகள் வரவுள்ள நிலையில், பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர் கூறியதாவது, நாட்டில் தேவையை அதிகரித்து, நுகர்வோர் மத்தியில் செலவீனங்களை அதிகரிக்கும் விதமாக மத்திய அரசு ஊழியர்களுக்குப் பண்டிகை கால முன்பணம் வழங்கப்படுகிறது. இதற்காக மத்திய அரசு சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடுகிறது.
இதன்படி, மத்திய அரசு அலுவர்கள் அனைவருக்கும் பண்டிகை கால முன்பணமாக பத்தாயிரம் ரூபாய் வட்டியில்லாமல் வழங்கப்படும்.
இந்த தொகையானது ரூபே ப்ரீபெய்ட் கார்டில் வழங்கப்படும் எனவும், அதை செலவு செய்ய 2021 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை காலக்கெடு உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்பணத் தொகையான பத்தாயிரம் ரூபாய் ஊழியர்களின் ஊதியத்திலிருந்து மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் பத்து மாதங்களுக்குப் பிடித்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய அரசு ஊழிர்களுக்கு சுற்றுலாச் செல்ல வழங்கப்படும் தொகையை அவர்கள் வேறு பொருள்கள் வாங்க பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளார். அதேவேளை இந்தத் தொகையை 12% அதற்கு மேல் உள்ள ஜி.எஸ்.டி பொருள்கள்(உணவு பொருள்கள் தவிர) வாங்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருவிழா கால விற்பனைக்கு தயாராகும் மாருதி!