இது குறித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமான் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டார். அதில், 15ஆவது நிதிக்குழுவின் பரிந்துரையின் பேரில் மாநில அரசுகளுக்கான வருவாய் பற்றாக்குறை நிதியாக 14 மாநில அரசுகளுக்கு ரூ.6,195.08 கோடியை விடுவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை ஆறு மாத காலம் தவணையாக வழங்கப்படும். கரோனா பாதிப்பு காலத்தில் கூடுதல் பங்களிப்பாக இந்த தொகையானது வழங்கப்படுகிறது என்றார்.
ஆந்திரா, அஸ்ஸாம், இமாச்சலப் பிரசேதம், கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், சிக்கிம், தமிழ்நாடு, திரிபுரா, உத்தரகாண்ட், மேற்கு வங்கம் ஆகிய 14 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல்-ஆகஸ்ட் காலக்கட்டத்தில் இதுபோன்ற நிதியை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு அதற்கு நிவாரணத் தொகை வழங்கவேண்டும் என நிதிக்குழு சார்பில் பரிந்துரை செய்யப்படும்.
இதையும் படிங்க: ஆகஸ்ட்டில் அதிகரித்த கார் விற்பனை!