ETV Bharat / business

லக்ஷ்மி விலாஸ் வங்கியில் 25,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது!

டெல்லி : அடுத்த ஒரு மாதத்திற்கு லக்ஷ்மி விலாஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் 25,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கத் தடை விதித்து மத்திய நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Lakshmi Vilas Bank
Lakshmi Vilas Bank
author img

By

Published : Nov 17, 2020, 8:56 PM IST

Updated : Nov 17, 2020, 9:07 PM IST

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவின் பல முன்னணி வங்கிகள் வாராக்கடன் உள்ளிட்ட நிதிச் சிக்கல்களால் அவதிப்பட்டு வருகின்றன. அந்தப் பட்டியலில் தற்போது லக்ஷ்மி விலாஸ் வங்கியும் இணைந்துள்ளது.

இன்று மாலை ஆறு மணி முதல் வரும் டிசம்பர் 16ஆம் தேதி வரை லக்ஷ்மி விலாஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் 25,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கத் தடை விதித்து மத்திய நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

லக்ஷ்மி விலாஸ் வங்கி கடந்த சில மாதங்களாகவே கடும் நிதிச் சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற வருடாந்திர பொதுக் கூட்டத்தில் வங்கியின் எம்.டி, சி.இ.ஓ உள்ளிட்ட ஏழு இயக்குநர்களை நீக்க வங்கியின் பங்குதாரர்கள் குழு முடிவெடுத்தது.

மேலும், வங்கியின் அன்றாட விவகாரங்களை நடத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அலுவலர், முன்னாள் ஆந்திர வங்கி இயங்குநர் உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட இயக்குநர் குழு அமைக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில்தான் தற்போது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கிகளுக்கும், இந்த ஆண்டு மார்ச் மாதம் யெஸ் வங்கிக்கும் இதேபோல கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விரைவில் 50 ஆயிரத்தை தொடும் சென்செக்ஸ்!

Last Updated : Nov 17, 2020, 9:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.