ETV Bharat / business

அமேசானுக்குப் போட்டியாகக் களமிறங்கும் கூகுள்! - online shopping platform

உலகப் புகழ்பெற்ற தேடுதல் தளமான கூகுள் ஈ காமர்ஸ் துறையில் நுழையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கூகுள்
author img

By

Published : Jul 24, 2019, 9:56 AM IST

உலகப் புகழ்பெற்ற தேடுதல் தளமான கூகுள் 1998ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆரம்ப காலகட்டங்களில் பல தேடுதல் தளங்கள் இருந்தாலும் கூகுள் அனைத்தையும் காலி செய்துவிட்டு தனிப்பெரும் தேடுதல் தளமாக தற்போது உள்ளது.

அதேபோல், சமீப ஆண்டுகளாக பெரும் வளர்ச்சியை அடைந்து வரும் ஈ காமர்ஸ் சந்தையில் அமேசான் நிறுவனம் பெரும் ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனமும் ஈ காமர்ஸ் துறையில் நுழையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது, அமேசானை போல தனக்கென தனிக் கிடங்கை உருவாக்குவதற்குப் பதில் கோஸ்ட்கோ, டார்கேட் போன்ற சில்லறை வர்த்தக நிறுவனங்களின் பொருட்களை மட்டும் விற்பனை செய்ய கூகுள் முடிவெடுத்துள்ளது. முன்னதாக ஃபிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகளில் கூகுளின் ஈ காமர்ஸ் தொடர்பான சோதனைகள் நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கூகுள் நிறுவனத்தின் ஈ காமர்ஸ் தொடர்பான மற்ற தகவல்கள் இன்னும் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.