ETV Bharat / business

பொதுத்துறை வங்கித் தலைவர்களுடன் நிதியமைச்சர் ஆலோசனை - நிதி அமைச்சர் பொதுத்துறை வங்கித் தலைவர்கள் ஆலோசனை

டெல்லி: முடங்கியுள்ள சிறு, குறு தொழில்துறையினருக்கு முறையான பணப்புழக்கத்தை உறுதிசெய்ய பொதுத்துறை வங்கித் தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

Nirmala
Nirmala
author img

By

Published : May 21, 2020, 11:53 AM IST

கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக பெரும் பாதிப்பிற்குள்ளான பொருளாதாரத்தைச் சீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பொதுத்துறை வங்கித் தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

ஊரடங்கு காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்கத்தைக் களைய, தற்சார்பு இந்தியா திட்டம் என்ற பெயரில் ரூ. 20 லட்சம் கோடி சிறப்பு நிதித் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.

இந்த அறிவிப்பு வர்த்தக நடவடிக்கையில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், வணிக நடவடிக்கைகள் மீண்டெழுவதற்கு ரிசர்வ் வங்கி மூலம் வங்கிகளுக்கு நிதி செலுத்தப்பட்டு, பணப்புழக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு சிறு, குறு நிறுவனங்களுக்காக பணப்புழக்கம், கடன் அறிவிப்புகள் மேற்கொண்டபோதிலும் வங்கிகளிலுருந்து அவை முறையாக தொழில்முனைவோருக்குச் செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவிவருகிறது. கடன் பெற யாரும் முன்வருவதில்லை என்ற சூழல் நிலவிவரும் நிலையில், இந்தச் சிக்கலைச் சீர்செய்ய நிதியமைச்சர் பொதுத்துறை வங்கிகளின் தலைவருடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

ஒதுக்கப்பட்ட நிதிகளை முறையாக நிறுவனங்களின் கைகளில் எவ்வாறு கொண்டு சேர்ப்பது என்பது குறித்து இந்த ஆலோசனையில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க: மின்சாரத் துறைக்கு ரூ.90,000 கோடி கடன் வழங்க மத்தி அரசு முடிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.