மதுரை: எம்ஜிஆர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது மலர் வணிக வளாகம்.
இங்கு மதுரை மாவட்டம் மட்டுமன்றி திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.
இந்நிலையில் மதுரை மலர்ச் சந்தையில் இன்றைய விலை நிலவரம் வெளியாகியுள்ளது.
- மதுரை மல்லிகை ரூ.1500
- பிச்சிப் பூ ரூ.500
- முல்லை ரூ.600
- சம்பங்கி ரூ.80
- செவ்வந்தி ரூ.100
- அரளி ரூ.200
- ரோஜா ரூ.100
- தாமரை ஒன்று ரூ.10
என விற்பனை செய்யப்படுகிறது.
சிறிய பூ வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், "தற்போது பெய்து வருகின்ற தொடர் மழையின் காரணமாக மதுரை மலர்ச் சந்தையில் பூக்கள் தேங்கி இருக்கின்றன.
ஆகையால், விற்பனையாகாமல் குப்பைக்குச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது செவ்வந்திப் பூக்கள் அனைத்தும் குப்பைகளாக கொட்டப்பட்டு வருவது வேதனை அளிக்கிறது," என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பணமதிப்பிழப்புக்கு பின்னும் உயர்ந்து வரும் ரூபாய் நோட்டுகளின் புழக்கம்!