ETV Bharat / business

பயணிகள் இல்லாமல் திண்டாடும் விமான நிறுவனங்கள் - ஒரே நாளில் 12 விமானங்கள் ரத்து! - chennai airport service stopped

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை குறைவு காரணமாக இன்று ஒரே நாளில் 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை உள்நாட்டு விமானநிலையம், flights cancelled from chennai
flights cancelled from chennai
author img

By

Published : Mar 4, 2021, 9:54 AM IST

சென்னை: உள்நாட்டு விமான நிலையத்தில் போதிய பயணிகள் பதிவு இல்லாததால், ஒரே நாளில் 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் முழுமையாகத் தளர்த்தப்பட்டு தற்போது முழு அளவில் விமான சேவைகளை நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து நாளொன்றுக்கு வருகை, புறப்பாடு விமானங்கள் 250 முதல் 260ஆக இருந்தன. அதைப்போல் பயணிகள் எண்ணிக்கையும் 20 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம்வரை இருந்தது.

ஆனால் இன்று பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. சென்னையிலிருந்து புறப்பாடு, வருகை பயணிகள் எண்ணிக்கை சுமார் 18,500ஆக மட்டுமே இருந்தது. அதைப்போல் புறப்பாடு, வருகை விமானங்கள் 231ஆகப் பதிவாகியிருந்தது.

இதற்கிடையே சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய காலை 7.05 மணி விசாகப்பட்டினம், காலை 9.05 கொச்சி, காலை 9.10 பாட்னா, காலை 10.05 மும்பை, காலை 11.30 கொச்சி, மாலை 6.30 கவுகாத்தி ஆகிய 6 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதைப்போல் இந்த இடங்களிலிருந்து சென்னைக்குத் திரும்பி வரவேண்டிய 6 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே இன்று ஒரே நாளில் மட்டும் சென்னை விமானநிலையத்தில் பயணிகள் இல்லாமல் 12 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.