2019 டிசம்பர் மாத வரையில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 4.56 விழுக்காடாக உள்ளது. வரவு ரூ .11.77 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் செலவினங்கள் 21.09 லட்சம் கோடியாக உள்ளன. 2020 மார்ச் 31 வரை திருத்தப்பட்ட நிதி பற்றாக்குறை 3.8 விழுக்காடாக உள்ளது.
மொத்த வரி வசூல் ரூ. 3.83 லட்சம் கோடி (பட்ஜெட் மதிப்பீட்டில் 53 சதவீதம்) ஆகும். மத்திய அரசின் நிகர வரி வருவாய் ரூ. 9.04 லட்சம் கோடியாக இருந்தது.
2019 டிசம்பரில், நிதி ஆணையம் பரிந்துரைத்தபடி மாநிலங்களுக்கு ரூ.7, 499.89 கோடி கிடைத்தது. மேலும் பல்வேறு திட்டங்களுக்கு அரசு ரூ.2, 714.03 கோடியை செலவிட்டது. 2020 ஜனவரியில், மாநிலங்களுக்கு ரூ.101.29 கோடி ரூபாய் குறைவாக கிடைத்தது.
நிதி பற்றாக்குறை ரூ .8.07 லட்சம் கோடியாக இருந்தது. இந்த தகவல்கள் நிதி அமைச்சகத்தின் கணக்கு மறுஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: புதிய உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை!