இந்தியாவில் கரோனா பாதிப்பை எதிர்கொள்ள 21 நாள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து மாநில அரசுகளும் சுகாதாரத்துறையில் பிரதான கவனம் செலுத்தவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும், கரோனாவை எதிர்கொள்ள அவசர நிதியாக சுகாதாரத்துறைக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்.
இந்நிலையில், மருத்துவ வசதிகளை முடுக்கிவிடும் விதமாக, இந்தியாவிலிருந்து வென்டிலேட்டர், முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு உடனடியாக தடை செய்துள்ளது. மருந்தகங்களில் மருத்துவ உபகரணங்கள் பதுக்கப்பட்டு தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் தீவிரக் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தேவை அதிகரிப்பால் விலை ஏற்றம் ஏற்படாதவகையில், நாடு முழுவதும் உள்ள உற்பத்தி நிறுவனங்கள், சிறைகளில் முகக்கவசம் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. அவசர காலத்தில் மருத்துவ உபகரணங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதைத் தடுக்கும் விதமாக, 200 எம்.எல் கிருமிநாசினி 100 ரூபாய்க்கு மேல் விற்கக்கூடாது எனவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மக்களுக்கு உதவ முன்வந்த டிஆர்டிஓ: கிருமி நாசினி குறைந்த விலையில் உற்பத்தி