இந்தியாவின் முன்னணி பேட்டரி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான எவரெடி நிறுவனம் சில ஆண்டுகளாக நிதிச்சுமையில் சிக்கித் தவித்து வருகிறது. நிதிச்சுமையைத் தீர்க்க ஐ.எல்.எஃப்.எஸ். (I.L.F.S) நடவடிக்கையின் மூலம் மீட்டெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நீதிமன்ற ஆணை அந்த நடவடிக்கையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நிறுவனத்தின் நிதிச் சிக்கல் தீர்வதற்கு நீண்டநாட்களாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவரெடி நிறுவனத்தின் நிதிச்சிக்கலானது பங்குச்சந்தையிலும் எதிரொலித்துள்ளது. குறிப்பாகக் கடந்த எட்டு மாதங்களில் எவரெடி பங்குகள் 75 சதவிகிதம் குறைந்துள்ளது. இதனால் அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் கடும் கலக்கத்தில் உள்ளனர்.
அத்துடன் எவரெடி நிறுவனத்தின் பேட்டரி விற்பனைக்கு ட்யூரோசெல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடவுள்ளதாகவும் பேச்சுகள் அடிபடத்தொடங்கின. இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.
கூட்டத்தில் பேசிய எவரெடி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அமிர்தன்ஷு கைத்தான், பங்குதாரர்களின் கவனத்திற்குக் கொண்டுவராமல் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றார். பங்குதாரர்களின் நம்பிக்கை என்றும் நிலைநாட்டப்படும் எனவும் உத்தரவாதம் அளித்தார்.
மேலும், வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுவது இயல்பான ஒன்றே எனத் தெரிவித்த அவர், நிறுவனத்தின் நிதிச்சிக்கலை போக்க இரவு பகலாக அனைவரும் உழைத்து வருவதாகத் தெரிவித்தார்.
கடந்தாண்டு இருநூறு ரூபாய்க்கு விற்ற எவரெடி பங்குகள், தற்போது நாற்பத்தைந்து ரூபாயாகக் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பிரபல பேட்டரி நிறுவனம்