சூர்யா விநாயக் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் அதன் குழு நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட ரூ.2,240 கோடி வங்கி மோசடி வழக்கில் ரூ.11.85 கோடி சொத்தை அமலாக்கத் துறை இணைத்துள்ளது.
அமலாக்கத் துறையினரின் விசாரணை பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் மற்றும் மத்திய புலனாய்வுப் பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை அடிப்படையாகக் கொண்டு சூர்யா விநாயக் இண்டஸ்ட்ரீஸ் இயக்குநர்கள், சஞ்சய் ஜெயின், ராஜீவ் ஜெயின் உள்ளிட்ட நபர்கள் பல்வேறு வங்கிகளிடமிருந்து ரூ. 2,240 கோடியை போலி பதிவுகள் மற்றும் கணக்கு மூலம் கடன் வாங்கியதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்த விசாரணையில் தற்போது சூர்யா விநாயக் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்களுடைய நகரக்கூடிய சொத்துகளான ரூ.11.85 கோடி சொத்தை அமலாக்கத் துறை இணைத்துள்ளது.
இதையும் படிங்க: முதலாளி நண்பர்களின் நலனுக்காக ஏழைகளைச் சுரண்டும் மோடி அரசு - ராகுல் தாக்கு!