இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் எந்த பிராண்டை மக்கள் அதிகம் நம்புகின்றனர் என்பது குறித்த தகவல்களை உள்ளடக்கிய பிராண்ட் டிரஸ்ட் ரிப்போர்ட்டை டி.ஆர்.ஏ. அமைப்பு ஆண்டுதோறும் வெளியிடும்.
அதன்படி இந்தாண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், அமெரிக்காவைத் தலைமையிடமாக கொண்டுள்ள டெல் நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியாவின் மிகவும் நம்பகமான பிராண்டு என்ற பெயரைப் பெற்றுள்ளது.
அதைத்தொடர்ந்து சீனாவின் பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமாக எம்ஐ (Mi) இரண்டாவது இடத்தையும் சாம்சங் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன. அதேபோல ஆப்பிளின் ஐபோன், எல்ஜி (LG), ஓப்போ ஆகிய நிறுவனங்கள் முறையே நான்கு, ஐந்து, ஆறாம் இடங்களைப் பெற்றுள்ளன.
பிரபல இந்தி பொழுதுபோக்குச் சேனலான சோனி தொலைக்காட்சி ஏழாவது இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சோனி தொலைக்காட்சி டாப் 10 இடங்களுக்குள் நுழைவது இதுவே முதல்முறையாகும்.
இவற்றைத் தொடர்ந்து மாருதி சுசூகி கார்கள் எட்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. ஆட்டோமொபைல் பிரிவில் மாருதி சுசூகி முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து சாம்சங் தொலைக்காட்சிக்கள் ஒன்பதாம் இடத்திலும் விவோ பத்தாவது இடத்திலும் உள்ளன.
இந்தியாவின் டாப் 20 நம்பகமான பிராண்டு தரவரிசையில் ஐந்து ஸ்மார்போன் நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
இது குறித்து டி.ஆர்.ஏ. அமைப்பின் சிஇஓ என். சந்திரமவுலி கூறுகையில், "இந்தக் கரோனா காலம் பல முக்கிய பிராண்டுகளுக்கும் சிக்கலான சூழலை உருவாக்கியுள்ளது. மேலும், நுகர்வோரும் பல காரணங்களுக்காக கவலைக்குரிய நிலையில் உள்ளனர். இதுபோன்ற இக்கட்டான காலகட்டத்தில்தான் பிராண்டுகளில் மீது மக்கள் வைத்துள்ள நம்பகத்தன்மையின் வெளிப்பாடு தெரியும்" என்றார்.
இதையும் படிங்க: வெள்ளி விழாவில் அடியெடுத்துவைக்கும் ரியல் பொம்மி பேக்கரி