இந்தியாவில் உற்பத்தி செய்யும் தயாரிப்புகளில் உற்பத்தி தேதியும் காலாவதியாகும் தேதியும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடைகளில் பாரம்பரிய முறையில் தயாரித்து விற்பனை செய்யப்படும் இனிப்புகளில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றிருப்பதில்லை.
முன்னதாக, ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குள் அனைத்துக் கடைகளும் தங்கள் இனிப்புகளில் உற்பத்தி தேதி, காலாவதியாகும் தேதியை அனைவருக்கும் தெரியும்படி கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், இதற்கான இறுதித் தேதி ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து ஆக்டோபர் 1ஆம் தேதிக்கு நீட்டிக்கப்படுவதாக ஆணையம் தற்போது அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா பரவல் காரணமாகவும் இனிப்பு சங்கத்தினரிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும் உற்பத்தி தேதி, காலாவதியாகும் தேதி ஆகியவற்றை மக்களுக்குத் தெரியும்படி வைக்க இறுதி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதிக்குள் அனைத்துக் கடை உரிமையாளர்களும் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குறையும் சீன ஸ்மார்ட்போன்கள் மீதான மோகம் - காரணம் என்ன?