உலகப் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்து வரும் சூழலில், பொருளாதாரத்தை மீட்டெடுக்க அனைத்து அரசாங்கமும் கடுமையாகப் போராடி வருகிறது.
பல சலுகைகளை அரசாங்கம் வழங்கினாலும்; பொருளாதார இழப்பைச் சரி செய்ய நிறுவனங்களுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. கரோனா பாதிப்பால் அனைத்துத் துறை நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.
இந்தச் சூழலில் 2020-2021நிதியாண்டில் இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறைக்கு கரோனா பாதிப்பில், ஒரு டிரில்லியன் டாலர்கள் அதாவது 76 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக, உலகளாவிய தொழில் முறை சேவை நிறுவனமான கே.பி.எம்.ஜி. கணித்துள்ளது.
இதுகுறித்து கே.பி.எம்.ஜி. வெளியிட்ட அறிக்கையில், கரோனா வைரஸ் பாதிப்பில் ரியல் எஸ்டேட் துறை கடும் சரிவில் உள்ளது. கிட்டத்தட்ட ரியல் எஸ்டேட் துறையை நம்பியுள்ள 250 நிறுவனங்கள் முடங்கிப்போய் உள்ளன. இந்த நிறுவனங்கள் மீண்டும் புத்துயிர் பெற கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் தேவைப்படும்.
மேலும் ஆறு முதல் பன்னிரெண்டு மாதங்களில், இந்த நிறுவனங்கள் ஓர் அளவிற்கு சிறப்பாகச் செயல்பட வாய்ப்புள்ளதாக கே.பி.எம்.ஜி. தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வீட்டிலிருந்தபடியே மருத்துவ பரிசோதனை - கரோனாவைக் கட்டுப்படுத்தும் செயலி