டெல்லி: இந்தியாவில் உற்பத்திசெய்யப்பட்ட செயற்கை சுவாசக் கருவிகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அமைச்சரவைக் குழு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது முற்றிலுமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.
இது குறித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குநரக தலைமைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, கரோனா பரவத் தொடங்கிய மார்ச் மாதத்தில் உள்நாட்டிலிருந்து செயற்கை சுவாசக் கருவிகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்திருந்தது.
கடலூரில் கலவரம்: முன்னாள் தலைவர் தம்பி வெட்டிக் கொலை... வீடுகள், படகுகளுக்கு தீ வைப்பு!
தற்போது இந்தியாவில் கரோனா இறப்பு விகிதம் 2.15 விழுக்காடாக உள்ளது. இந்த விவரத்தின் மூலம் செயற்கை சுவாசக் கருவிகளின் தேவை குறைந்திருக்கிறது என்று மத்திய அரசு நம்புகிறது. காரணம் ஜூன் மாத தொடக்கத்தில் நாட்டில் இறப்பு விகிதம் 3.33 விழுக்காடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 31 நிலவரப்படி, 0.22 விழுக்காடு நோயாளிகள் தான் செயற்கை சுவாசக் கருவிகள் மூலம் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், ஜனவரி 2020 உடன் ஒப்பிடும்போது, தற்போது நாட்டில் 20க்கும் அதிகமாக செயற்கை சுவாசக் கருவிகள் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 36,500க்கும் மேற்பட்ட நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.
'என்னது என்னோட தலைமையில புது தயாரிப்பாளர் சங்கமா?' - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பாரதிராஜா
மொத்த எண்ணிக்கையில் சுமார் 11 லட்சத்தை நெருங்கியுள்ளது. கோவிட்-19 நோயிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 64.53 விழுக்காடுடன் 10லட்சத்து 94ஆயிரத்து 374ஆக உள்ளது. தற்போது செயலில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 5லட்சத்து 65ஆயிரத்து 103ஆக இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரபடி இந்தியாவில் 1488 பிரத்யேக கோவிட்-19 மருத்துவமனைகளும், 3231 கோவிட்-19 சுகாதார பராமரிப்பு மையங்களும், 10,755 கோவிட்-19 பராமரிப்பு மையங்களும் உள்ளன.