ETV Bharat / business

கோவிட் -19: உயிரா அல்லது வாழ்வாதாரமா? அரசு முன் நிற்கும் கடினமான தேர்வு - கரோனா லாக்டவுன்

இந்தியாவில், மார்ச் 5 முதல் ஜூன் 7ஆம் தேதிவரை ஐந்து கட்ட ஊரடங்கிற்கு பிறகு ஜூன் 8 முதல் மோடி அரசாங்கம் பொருளாதாரத்தைத் திறக்கத் தொடங்கியது. கட்டுப்பாடுகளை தளர்த்தும் நடவடிக்கைகள் பொருளாதாரத்தை மேம்படுத்த வழிவகுத்து வருவாய் வசூலை அதிகரிக்க செய்தன, ஆனால் அவற்றுடன் கோவிட்-19 நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்தது.

Modi
Modi
author img

By

Published : Jul 3, 2020, 2:30 PM IST

பொருளாதாரத்தை புதுப்பிப்பதற்கான ஊரடங்கு நடவடிக்கைகளை நாடுகள் தளர்த்தத் தொடங்கியதும் இந்தியாவிலும் உலகிலும் உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்துவருகிறது. இந்தியாவில், மார்ச் 5 முதல் ஜூன் 7 வரை ஐந்து சுற்று ஊரடங்கிற்கு பிறகு ஜூன் 8 முதல் மோடி அரசாங்கம் பொருளாதாரத்தைத் மேம்படுத்தும் நடவடிக்கைகளை தொடங்கியது.

ஊரடங்கு தளர்வு நடவடிக்கைகள் பொருளாதாரத்தை மேம்படுத்த வழிவகுத்து அதன் மூலம் வருவாய் வசூல் அதிகரித்தன, ஆனால் அவற்றுடன் கோவிட் -19 நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது . ஜூன் மாதத்தில், இந்தியாவின் ஜிஎஸ்டி வருமானம் கோவிட்டுக்கு முந்தைய நிலையை கிட்டத்தட்ட தொட்டது, ஆனால் உறுதிப்படுத்தப்பட்ட நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதே காலகட்டத்தில் 2 லட்சத்திலிருந்து 6 லட்சமாக உயர்ந்தது.

கடந்த மாதம், உலக சுகாதார அமைப்பு, கோவிட் -19 நோய்த் தொற்றுகளின் அடுத்த எழுச்சிக்கு வழிவகுக்கும் என்பதால் ஊரடங்கு நடவடிக்கைகளை தீவிர எச்சரிக்கையுடன் தளர்த்துமாறு எச்சரித்திருந்தது. சில பொருளாதார வல்லுநர்களும் தளர்வு நடவடிக்கைகளின் செயல்திறன் குறித்த சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ளனர். புதிய கரோனா வைரசுக்கு மருத்துவ அறிவியலில் தீர்வு கிடைக்காவிட்டால் பொருளாதாரத்தை புதுப்பிக்க முடியாது என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகிறார்கள். தீவிர தொற்றுநோயான வைரஸ் நாட்டில் 17,400க்கும் மேற்பட்டவர்களையும், உலகளவில் 5,18,000 க்கும் அதிகமான மக்களையும் கொன்றுள்ளது.

“கரோனா வைரஸைக் கையாள்வதற்கு வேண்டிய அறிவியல் வளர்ச்சி என்பது வேறு பிரச்சினை. ஆனால் இதற்கிடையில், அதிகமான எண்ணிக்கையிலான நோய்தொற்றாளர்கள் வரும்போது, ஒரே சமயத்தில் கரோனாவை கையாள்வதும் மக்களின் வாழ்வாதாரத்தை கையாள்வதும் ஒரு கடினமான பணியாகும்”என்று இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் ஆர் காந்தி கூறினார் "இது கடினமான ஒன்று," என்று அவர் ஈடிவி பாரத்-தின் ஒரு கேள்விக்கு பதிலளித்தார்.

நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் -19 நோய்தொற்றாளர்கள் எண்ணிக்கை ஏற்கனவே 6,00,000 ஐத் தாண்டியுள்ளது, இது அமெரிக்கா (27,31,000), பிரேசில் (14,10,000) மற்றும் ரஷ்யா (6,54,000) க்குப் பிறகு உலகின் நான்காவது மிக உயர்ந்ததாகும். தரவுகளைக் கண்காணிக்கும் உலகமீட்டர் (www.worldometers.info) படி. மார்ச் மாத இறுதியில், பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் வைரஸின் சமூக பரவலைக் குறைக்க உலகெங்கும் எங்கும் இல்லாத வகையில் மிகக் கடுமையான நாடு தழுவிய ஊரடங்கை விதித்தது. எவ்வாறாயினும், ஊரடங்கு நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை ஒரு நிறுத்தத்திற்கு கொண்டு வந்தது.

செவ்வாயன்று வெளியிடப்பட்ட ஜிஎஸ்டி வருமானம் குறித்த தரவு, ஊரடங்கு காலத்தில் வணிகங்களுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்பதை வெளிப்படுத்தியது. ஏப்ரல் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் கடந்த ஆண்டு இதே மாதத்தில் வசூலிக்கப்பட்ட 1,13,866 கோடியுடன் ஒப்பிடும்போது ரூ. 32,294 கோடியாக குறைந்துள்ளது, இது 81,572 கோடி அல்லது 72% சரிவு. ஆனால், அரசாங்கம் தடையை தளர்த்தத் தொடங்கியபோது, வசூல் முன்னேற்றத்தைக் காட்டியது, மே மாதத்தில் ரூ .62,009 கோடியாகவும், ஜூன் மாதத்தில் ரூ .90,917 கோடியாகவும் இருந்தது.

கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் 9% தான் குறைந்துள்ளது, இது பொருளாதார நடவடிக்கைகள் படிப்படியாக கோவிட்டுக்கு முந்தைய நிலைகளுக்குத் திரும்புவதைக் காட்டுகிறது. ஆயினும், அரசாங்கம் அதன் தளர்த்துதல் செயல்முறையைத் தொடங்கியதும், வரியில் காட்டிய அதே பிரதிபலிப்பு, நாட்டில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கையையும் கணிசமாக உயரத் தொடங்கியது. உலக அளவீட்டைப் பொறுத்தவரை, நாட்டில் 1,98,370 ஆக இருந்த உறுதிப்படுத்தப்பட்ட நோய்தொற்று , வெறும் 15 நாட்களில் 1,44,656 அதிகரித்து ஜூன் 15 அன்று 3,43,026ஆக இருந்தது.

ஜூன் 26 அன்று, நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 நோய்தொற்று எண்ணிக்கை 5,00,000த்தை தாண்டியது, ஜூலை 1ஆம் தேதி, உறுதிப்படுத்தப்பட்ட நோய்தொற்றுகளின் எண்ணிக்கை 6,00,000த்தை தாண்டியது. ஜூன் 1 முதல் ஜூலை 1 வரையிலான காலகட்டத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை 1,98,000லிருந்து 6,00,000ஆக, ஒரு மாதத்தில் 4,00,000க்கும் அதிகமாக, உயர்ந்தது. சமூக இடைவெளி மற்றும் சுகாதார விதிமுறைகளை ஆர்வத்துடன் பின்பற்ற வேண்டிய அவசியம் இருந்த போது மக்கள் மத்தியில் மனநிறைவு உணர்வு இருந்ததை பிரதமர் நரேந்திர மோடி கவனிக்க இது தூண்டியது

இந்த ஆண்டு நவம்பர் வரை நாட்டின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு அத்தியாவசிய உணவை வழங்க பிரதான் மந்திரி கரிப் கல்யாண் ஆன் யோஜனா (பிரதமர் ஏழை நல உணவு தானிய திட்டம்)-த்தை திங்களன்று நீட்டிக்கப்படுவதாக அறிவித்தபோது, ​​ மக்கள் சமூக விலகல் விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்கவும், மற்றவர்களும் அவற்றைப் பின்பற்றுவதை உறுதிசெய்யுமாறும் பிரதமர் மோடி வலியுறுத்தினார் .

இருப்பினும், இந்தத் திட்டத்தை நவம்பர் வரை நீட்டிப்பது கோவிட்-19 முன்னர் எதிர்பார்த்ததை விட நீண்ட காலம் நீடிக்கும் என்ற அரசாங்கத்தின் மதிப்பீட்டை பிரதிபலிக்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டு மார்ச் கடைசி வாரத்தில் அறிவித்த நலத்திட்ட அறிவிப்புகளில், பிரதமர் கரிப் கல்யாண் யோஜனாவின் கீழ் உள்ள பெரும்பாலான நலத்திட்ட நடவடிக்கைகள் மூன்று மாதங்களுக்கு நாட்டின் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு மற்றும் சில செலவுகளுக்கான பணத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தன.

ஏப்ரல், மே மற்றும் ஜூன். ஜூன் மாதத்திற்குள் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியும் என்று அரசாங்கமும் எதிர்பார்த்தது. ஆனால் நவம்பர் வரை இலவச ரேஷன் திட்டத்தை நீட்டித்தது என்பது அரசாங்கம் நீண்ட பயணத்திற்கு தயாராகிவிட்டது என்பதைக் காட்டுகிறது. ஆர்.காந்தி கூறுகையில், உயிர்களைக் காப்பாற்றுவது மற்றும் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவது என்று இரண்டு விருப்பங்களுக்கு இடையில் அதிகாரிகள் சமநிலையை ஏற்படுத்த வேண்டும்.

”அரசு பொருளாதாரத்திற்கு ஆதரவாக முடிவு செய்தால் மற்றவர்கள் வேறொரு நிலைப்பாட்டை எடுக்கலாம், மக்கள் ஆரோக்கியத்திற்கு ஆதரவாக அரசு முடிவு செய்தால் மற்றவர்கள் வேறு நிலைப்பாட்டை எடுக்கலாம், ஆனால் இது சரியான அணுகுமுறை அல்ல, ஏனெனில் இன்றைய நிலைமைக்கு ஒற்றை தீர்வு என்பது சாத்தியமில்லை”என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் கூறினார் . "மக்கள் உடல்நலம் மற்றும் வாழ்வாதாரத்தின் நலனுக்காக அதிகாரிகள் சரியான முடிவை எடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன், அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.

இதையும் படிங்க: 'இரண்டரை லட்சம் கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை... ' : கூகுள் பே-வின் ஜூன் மாத சாதனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.